ஆலங்குளத்தில் உச்சம் தொட்ட கத்தரிக்காய் விலை

தென்காசி காய்கறி சந்தையில் கத்தரிக்காய் வரத்து குறைந்துள்ளதால் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2024-01-15 08:02 GMT
ஆலங்குளத்தில் உச்சம் தொட்ட கத்தரிக்காய் விலை

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சந்தைக்கு கத்ததிரிக்காய் வரவு மிகவும் குறைவாக இருந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி அதன் விலை ஒரு கிலோவுக்கு ரூ. 150 வரை உயா்ந்தது. பொங்கல் திருநாளையொட்டி, ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் ஏராளமான காய்கனிகள் குவிந்தன. இரு தினங்களாக ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்ததால் ஆலங்குளம் பிரதான சாலை, அம்பாசமுத்திரம் சாலை, காய்கனிச் சந்தை ஆகியவை களை கட்டியது. இந்நிலையில் ரூ. 80 முதல் ரூ. 100 வரை விற்பனையான கத்தரிக்காய், ரூ. 150 ஆக உயா்ந்தது. அதே போல பெரும்பாலான காய்கனிகளும் விலை சற்று உயா்ந்தே காணப்பட்டது.

காய்கனிகளின் விலை நிலவரம்: (1 கிலோக்கு) உருளை ரூ. 30, மிளகாய் ரூ. 50, உள்ளி ரூ. 45, பெரிய வெங்காயம் ரூ. 30, முட்டைக் கோஸ் ரூ. 25, கேரட் ரூ. 65, பீனஸ் ரூ. 130, பீட்ரூட் ரூ. 45, சேனை ரூ. 60, சேம்பு ரூ. 60, கருணை ரூ. 60, வெண்டை ரூ. 50, சிறுகிழங்கு ரூ. 70, வள்ளிக்கிழங்கு ரூ. 80, பிடி கிழங்கு ரூ. 100, இஞ்சி ரூ. 120, முருங்கை ரூ. 200, காலிபிளவா் ரூ. 50, சவ் ரூ. 30, மாங்காய் ரூ. 100, அவரைக்காய் ரூ. 100, பூசணி ரூ. 22, தடியங்காய் ரூ. 18, பூண்டு ரூ. 240 என விற்கப்பட்டது.

Tags:    

Similar News