கத்திரிக்காய் விளைச்சல் அமோகம்
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கத்திரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கத்திரிக்காய் விளைச்சல் அமோகம் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் குருபரப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் கத்திரிக்காய் விளைச்சல் அமோகமாக செய்யப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பகுதி கடும் வெயில் தாக்கத்தால் கத்திரிக்காய் விளைச்சல் குறைவாக காணப்பட்டது.
இதனால் கத்திரிக்காய் விளையும் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் நீர் வளம் அதிகரித்து இருப்பதால் வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், பண்ணப்பள்ளி, நேரலகிரி, அலேகுந்தாணி, பதிமடுகு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைச்சல் அமோகமாக செய்யப்பட்டு வருகிறது. மேலும் கத்திரிக்காய் விலை அதிகரித்திருப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டு வருகின்றனர். தற்போது கத்திரிக்காய் அறுவடை செய்து பல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஒரு கிலோ கத்திரிக்காய் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் விற்கப்பட்டு வருவதால் விவசாயிகள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.