ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி ஒளிபரப்பு

குமாரபாளையம் ராமர் கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

Update: 2024-01-23 04:59 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராமர் கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி ஆன்மீகவாதி ஓம் சரவணா ஏற்பாட்டின் பேரில் பக்தர்களுக்காக பெரிய அளவிலான டி.வி. வைத்து ஒளிபரப்பப்பட்டது. இதில் இப்பகுதி மற்றும் பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று, ராமர் புகழ் பாடியவாறு, கும்பாபிஷேக விழாவை கண்டு ரசித்தனர். ராமர் கோவிலில் உள்ள ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சேநேயர், கணபதி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, nமற்றும் அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News