வீட்டின் பீரோவை உடைத்து நகை பணம் திருட்டு

கொள்ளை சம்பவம் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

Update: 2023-12-09 07:10 GMT

வீட்டின் பீரோவை உடைத்து நகை பணம் திருட்டு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள உமையதலைவன்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் சுந்தர்ராஜ் (33). வேன் டிரைவர். இவரது மனைவி அருகே வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.சுந்தர்ராஜின் தாய் காளியம்மாள், நூறுநாள் வேலைக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது இதை நோட்டமிட்டு அறிந்து கொண்ட மர்மநபர்கள் சுந்தர்ராஜ் வீட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 2 பவுன் செயின், அரை பவுன் மோதிரம், ரூ.7 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இந்நிலையில் சாப்பிடுவதற்காக சுந்தர்ராஜ், வீட்டுக்கு சென்றுள்ளார், அங்கு கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் மர்ம நபர்களால் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து திருவேங்கடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் புகாரின் பேரில் திருவேங்கடம் எஸ்.ஐ. தாமரைலிங்கம் மற்றும் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 100 நாள் வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளி வீட்டில் மர்ம நபர்கள் நோட்டமிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்த பட்ட சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

Tags:    

Similar News