வெள்ளிச்சந்தை அருகே அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது
வெள்ளிச்சந்தை அருகே அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது.
Update: 2024-06-19 10:52 GMT
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள மேல முட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் ( 55) இவருடைய தம்பி தாசன் (42). சகோதரர்கள் இருவரும் அந்த பகுதியில் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் வள்ளத்திற்கு அரசு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெயை பங்கிடுவதில் பிரச்சனை ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலில் மீன் பிடித்து விட்டு வந்த ராஜன் வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த தாசன் திடீரென ராஜனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை தகாத வார்த்தையால் பேசி கீழே தள்ளியுள்ளார். பின்னர் தாசன் தான் மறை வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜனை சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றார். இதில் படுகாயம் அடைந்த ராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து தாசனை கைது செய்தனர்.