கெங்கவல்லி அருகே பயங்கரம் - அண்ணன் குத்திக்கொலை
கெங்கவல்லி அருகே அண்ணன் குத்திக்கொலை - போலீசார் கைது.
Update: 2024-03-19 06:29 GMT
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 53). இவருக்கும், அவருடைய தம்பி காசி என்பவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. கடந்த 16-ந் தேதி அருணாசலம், விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய தம்பி காசி, உறவினர் பீமன் என்பவருடன் வயலுக்கு வந்தார். அங்கு அருணாசலத்திடம், நிலத்தில் எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த காசி கத்தியால் அண்ணன் அருணாசலத்தை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அருணாசலத்தை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அருணாசலம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி கொலை பீமன் வழக்குப்பதிவு செய்தனர். அண்ணனை கொலை செய்ததாக காசி, அவருடைய உறவினர் பீமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.