தங்கை இறந்து விட்டதாக கூறி வாரிசு சான்றிதழ் வாங்கிய சகோதரர்கள்!

தங்கை இறந்து விட்டதாக கூறி வாரிசு சான்றிதழ் வாங்கிய சகோதரர்கள்!

Update: 2024-06-20 06:14 GMT
தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி வடபாதி தெக்கிக்காடு முக்கத்தில் வசித்து வருபவர் காந்தி நேசன் செட்டியார் இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து 17 மாதங்கள் ஆகின்றன இந்நிலையில் காந்தி நேசன் செட்டியாருக்கு பவுன் ரோஜா என்ற மனைவியும், விநாயக மூர்த்தி, சரவணன்,ராஜா, கண்ணதாசன் என்ற 4மகன்களும் தேவி என்ற 1 மகளும் உள்ளனர். தேவி காந்தி நேசன் செட்டியாரின் செல்ல மகளாக திகழ்ந்துள்ளார். தேவியை அவரது தந்தை ஆலங்குடியை சேர்ந்த சக்ரவர்த்தி என்பவருக்கு திருமணம் செய்து வைத்து 23ஆண்டுகள் ஆகின்றன தேவி கணவன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சகோதரர்களில் 4பேரில் மூத்த சகோதரர்ரான வினாயக மூர்த்தி ஏற்கெனவே உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதேபோல் காந்தி நேசன் செட்டியார் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் அவர் இறந்ததற்க்கா ஒரத்தநாடு தாலுகாவில் மனு அளித்து இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வாங்கி உள்ளனர் தேவியின் சகோதரர்கள். இந்த வாரிசு சான்றிதழில் தேவி இறந்து விட்டதாக பொய் கூறி அவரது சகோதரர்கள் வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர். அதற்கு உடந்தையாக சகோதரர் கண்ணதாசனின் உறவினர் ஒருவர் ஒரத்தநாட்டில் வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருவதாகவும் அவர்தான் தன்னுடைய பெயரை நீக்க முழு காரணமாக உள்ளதாக தேவி குற்றம் சாட்டுகிறார். தேவி இறந்தாக கோரி சகோதரர்கள் வாரிசு சான்றிதழ் வாங்கியது தேவிக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் உறவினர்கள் மூலம் சகோதரர்கள் தான் இறந்து விட்டதாக கூறி சகோதரர்கள் வாரிசு சான்றிதழ் வாங்கியதாக கூறியுள்ளனர். தகவலறிந்த தேவி அருகே உள்ள கடையில் ஆன்லைன் மூலமாக வாரிசு சான்றிதழை பெற்று பார்க்கும் போது அதில் தன்னுடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இன்று தேவியின் சகோதரர் ராஜா கறம்பக்குடி உள்கடை வீதியில் தனது தாயார் பெயரில் பவுன் ரோஜோ ஜீவல்லரி என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு சென்று தேவி மற்றும் அவருடைய கணவர் சக்ரவர்த்தி தான் இறந்து விட்டதாக கூறி வாரிசு சான்றிதழ் வாங்கியது ஏன் என்று கேட்ட பொழுது தேவி மற்றும் அவரது கணவரை தேவியின் சகோதரர்கள் ராஜா மற்றும் கண்ணன் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சக்ரவர்த்தி மற்றும் அவரது மனைவி தேவி அருகே உள்ள கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சகோதரி உயிருடன் இருக்கும் பொழுதே இறந்ததாக கூறி வாரிசு சான்றிதழ் வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் உயிருடன் இருக்கும் பொழுதே இறந்ததாக கூறி வாரிசு சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவி மற்றும் அவரது கணவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News