அரசு பஸ் டிரைவர் மீது கொடூர தாக்குதல் - செல்போன் காட்சிகள் வைரல்
அரசு பஸ் டிரைவரை அடித்து, உதைத்து பஸ்ஸிலிருந்து தள்ளிய செல்போன் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுவதால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு 8 மணிக்கு வந்தது இந்த பஸ்சை திருவாய்ப்பாடியை சேர்ந்த முத்து மகன் ரமேஷ் (வயது 45) ஓட்டிச் வந்தார். கண்டக்டராக செந்தில்குமார் பணியில் இருந்தார். பஸ்ஸில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் பஸ் கும்பகோணம் பழைய பாலக்கரை அருகே வந்து போக்குவரத்து நெருக்கடியில் நின்றது. அப்பொழுது பஸ்ஸின் முன்பக்கம் நின்ற 10 பேர் கொண்ட கும்பல் டிரைவரை உடனே பஸ்சை எடுத்துச் செல்லுமாறு எச்சரித்தது. இதனால் டிரைவர் ரமேஷ் இப்பொழுது எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்
. இதனால் ஆத்திரம் அடைந்த 10 பேர் கொண்ட கும்பல் பஸ்ஸின் உள்ளே சென்று டிரைவரை தாக்கியது. இதில் டிரைவரை முகம் கண் மூக்கு ஆகியவை உடைந்து ரத்தம் கொட்டியது. இந்த சம்பவத்தை பார்த்த பஸ் பயணிகள் பஸ்ஸிலிருந்து அலறி அடித்துக் கொண்டு அதிர்ச்சியுடன் ஓடினார். இதை சற்றும் எதிர்பாராத பஸ் டிரைவர் ரமேஷ் தாக்கியவர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறி அங்குமிங்கும் ஓடினார். இந்த நிலையில் பஸ்ஸின் உள்ளே சென்று டிரைவரை தாக்கியதோடு காலால் எட்டி உதைத்து ரோட்டுக்கு கொண்டு வந்து கீழே படுக்க வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்ட டிரைவர் ரமேஷ் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூச்சலிட்டு அழைத்தார். இந்த நிலையில் அந்த வழியாக வந்த 2 பேர் டிரைவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களையும் சராமாறியாக தாக்கியது. இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதையடுத்து காயமடைந்த டிரைவர் ரமேஷ் மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற ரெண்டு பேரும் கும்பகோண அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பஸ் டிரைவர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் தகராறு ஈடுபட்ட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதனால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது