தென்னை வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: ஆராய்ச்சியாளர் நன்றி

தென்னை வளர்ச்சிக்காக தமிழக அரசு பட்ஜெட்டில் 36 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு அரசம்பட்டி தென்னை ஆராய்ச்சியாளர் ஜெ.கே.கெனடி நன்றி தெரிவித்தார்.

Update: 2024-02-20 09:48 GMT

தென்னை வளர்ச்சிக்காக தமிழக அரசு பட்ஜெட்டில் 36 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு அரசம்பட்டி தென்னை ஆராய்ச்சியாளர் ஜெ.கே.கெனடி நன்றி தெரிவித்தார்.

தென்னை வளர்ச்சிக்காக தமிழக அரசு வேளாண்மை துறை பட்ஜெட்டில் 36 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு அரசம்பட்டி தென்னை ஆராய்ச்சியாளர் ஜெ.கே.கெனடி நன்றி தெரிவித்து மேலும் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்னை மதிப்பு கூட்டப்பட்ட விற்பனை பூங்கா ஒன்றை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.


தற்பொழுது நடைபெற்றுவரும் தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் தென்னை வளர்ச்சிக்காக தமிழக அரசு வேளாண்மை துறை பட்ஜெட்டில் 36 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் அதற்க்கு அரசம்பட்டி தென்னை ஆராய்ச்சியாளர் ஜெ.கே.கெனடி நன்றி தெரிவித்தார்.

மேலும் ஆண்டுக்கு லட்சம் 70 ஆயிரம் கோடி வருமானம் வரக்கூடிய இந்த தென்னை விவசாயத்திற்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தினால் அரசுக்கு 20 ஆயிரம் கோடி வருமானம் உள்ள நிலையில் மேலும் விவசாயிகளுக்கும் கூடுதலாக பத்தாயிரம் கோடி வருமானம் கிடைக்கும்மெனவும் இதற்காக ஒருங்கிணைந்த தென்னை உற்பத்தி மையம் அமைக்கவேண்டுமேனவும் இதனால் தென்னையில் இருந்து கிடைக்கும் 25 க்கும் மேற்ப்பட்ட தென்னை நார், தேங்காய் எண்ணெய், வெர்ஜின் ஆயில், தென்னை பவுடர், கிரீம், நீரா பானம், தென்னை சார்க்கரை, தேங்காய் ஓட்டில் இருந்து கிடைக்கும் பத்திற்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் என இவை அனைத்தையும் ஒருகிணைந்து கொள்முதல் செய்து விற்பனை செய்யும் உற்பத்தி மையத்தை ஆரம்பித்தால் தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் எனவும் 25 லட்சம் தென்னை விவசாயிகள் பயனடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த 36 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றியை தெரிவித்தார்._

Tags:    

Similar News