மாட்டு வண்டி எல்லை பந்தயம்

சாக்கோட்டையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது

Update: 2024-06-27 15:18 GMT

மாட்டு வண்டி பந்தயம் 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டையில் தேர்திருவிழா‌வை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, நாடு மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரியமாட்டிற்கு 8 மைல் தூரமும், நடு மாடு பிரிவிற்கு 7 மைல் தூரமும், பந்தய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டது. பெரியமாட்டுப் பிரிவில் 7 ஜோடி மாடுகளும், நடு மாடு பிரிவிற்கு 8 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. போட்டிகள் துவங்கியவுடன் மாடுகள் சீறிப்பாய்ந்து ஒன்றை ஒன்று முந்தி சென்றன.

விருவிருப்பாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தினை சாக்கோட்டை, காரைக்குடி, கண்டனூர், பீர்கலைக்காடு, பளையூர், சிறுவயல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்த பார்வையாளர்கள் சாலையின் இரு புறங்களில் இருந்து உற்சாகமாக கண்டுகளித்தனர்.

பெரிய மாட்டு பிரிவில் மாட்டுவண்டிகள் ஒன்றை ஒன்று முந்தி சென்று இறுதி வரை பார்வையாளர்களை பெகுவாக கவர்ந்தது. போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்க பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags:    

Similar News