இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தயம்

இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

Update: 2024-02-24 13:49 GMT

மாட்டு வண்டி பந்தயம் 

அரிமளம் அருகே இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஓணாங்குடி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர்களால் நடத்தப்பட்டும் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் இன்று காலை 6 மணி அளவில் தொடங்கியது. பந்தயத்தில் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டனர்.

பந்தயமானது பெரிய மாடு (புது பூட்டு), 4 வயதுடைய (சிறிய மாடு) என்ற பிரிவில் பந்தயம் நடத்தப்பட்டது. பெரிய மாடு போய் வர 5 மைல் தூரமும், சிறிய மாடு போய் வர 4 மைல் தூரம் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் பெரிய மாடு பிரிவில் 22 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதேபோல் சிறிய மாடு பிரிவில் 32 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் பந்தயத்தில் முதல் ஐந்து இடங்களை பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

பந்தயமானது ஓணாங்குடி - புதுக்கோட்டை சாலையில் நடத்தப்பட்டது. பந்தயத்தை காண சுற்றுவட்டார பகுதிகளுக்கு சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்திருந்தனர்.

Tags:    

Similar News