நீதிமன்ற ஊழியர் வீட்டில் திருட்டு

தஞ்சாவூரில் நீதிமன்ற ஊழியர் வீட்டில் 13 பவுன் நகைகள், ரொக்கம் களவு போன சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-23 17:24 GMT

திருட்டு 

தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் செல்வகணபதி(34). தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், நகல் வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், மே 18-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார்.

இந்நிலையில், மறுநாள் இவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதைக் கண்ட அண்டை வீட்டார் செல்வகணபதிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, செல்வகணபதியின் மாமனார் வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 13 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசு உட்பட 200 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News