வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
அரக்கோணம் அருகே பூட்டி மூட்டை உடைத்து நகை திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-19 09:40 GMT
திருட்டு
அரக்கோணம் அருகே தண்டலம் கிராமம் சித்தேரி ரோடு பகுதியை வெங்கடேசன் (வயது 44). தனியார் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் அரக்கோணம் அடுத்த மோசூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வெங்கடேசன் வேலை முடிந்து நள்ளிரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பூட்டியிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வெங்கடேசன் அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.