பேருந்து மீது மோதி விபத்து - இருவர் காயம்
வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து மீது மோதி விபத்து. இருவர் காயம்.காவல்துறை வழக்கு பதிவு.
Update: 2024-03-17 11:45 GMT
ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ஜோதிஸ்வரன். இவரது சகோதரர் பாலகிருஷ்ணன் வயது 46. நசியனூர் அருகே உள்ள ஆட்டையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் திருநாவுக்கரசு வயது 46. இவர்கள் மூவரும் சான்ட்ரோ காரில், மார்ச் 14ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில், கரூர் - ஈரோடு சாலையில் வந்து கொண்டிருந்தனர். காரை திருநாவுக்கரசு ஓட்டி வந்தார். இவர்களது கார் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, நொய்யல் குறுக்கு சாலை, பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, காரை வேகமாக இயக்கியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து அதே சாலையில் வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த பாலகிருஷ்ணன் மற்றும் ஜோதீஸ்வரன். ஆகிய இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், ஈரோட்டில் உள்ள எல் கே எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், கவன குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.