நெல்லையில் பேருந்து இயக்கம்: ஆட்சியர் தகவல்

நெல்லையில் பேருந்து இயக்கம் குறித்து ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Update: 2024-02-19 10:09 GMT

மாவட்ட ஆட்சியர் 

நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் நேற்று திறக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து அனைத்து நகர பேருந்துகளும் படிப்படியாக இயங்கத் தொடங்கும். புறநகர் பேருந்துகள் சந்திப்பு வழியே செல்ல ஆர்டிஓ தலைமையில் குழுவும் போலீசாரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மாநகராட்சி, போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர் சார்பில் தொடர் கண்காணிப்பு பணி நடக்கும் என ஆட்சியர் காரத்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News