தொழில் நஷ்டத்தில் மனமுடைந்த வியாபாரி விஷமருந்தி தற்கொலை
பொள்ளாச்சி அருகே தொழில்நஷ்டத்தால் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-27 06:59 GMT
தற்கொலை
பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார் கருப்பட்டி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.கருப்பட்டி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் சில நாட்களாக மனவேதனையில் காணப்பட்டபவர். சம்பவத்தன்று வீட்டில்விரக்தி காரணமாக விஷம் குடித்து மயங்கி விழுந்த நிலையில் அவரை மீட்ட குடும்பத்தார் அருகில் தனியார் இடத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு விஜயகுமார் கொண்டு வரபட்ட நிலையில் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பல அளிக்காமல் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொள்ளாச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.