திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே நங்கவள்ளியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-05-02 03:05 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே நங்கவள்ளியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.


மேட்டூர் அருகே நங்கவள்ளியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேட்டூர் அருகே நங்கவள்ளி பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம். செல்வகணபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி ,இளநீர், வெள்ளரி, பணை நுங்கு, எலுமிச்சை சாறு, கம்மங்கூழ் நீர்மோர் ஆகியவற்றை வழங்கினார். இதேபோல் ஜலகண்டாபுரம்,வனவாசி, பி.என்.பட்டி,சாம்பள்ளி,குஞ்சாண்டியூர் ஆகிய பகுதிகளிலும் திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை டி.எம். செல்வகணபதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் சம்பத்குமார்,ஒன்றிய செயலாளர் அர்ந்த நாரீஸ்வரன், பேரூர் செயலாளர்கள் முருகன், வெங்கடாசலம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News