நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல்
நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மோகன் சி. லாசரஸ் திறந்து வைத்தார்.;
Update: 2024-05-02 06:27 GMT
நீர்மோர் பந்தல்
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் சமுதாயப் பணி பிரிவின் புதுவாழ்வு சங்கம் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன் சி. லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை செய்து பொது மக்களுக்கு நீர், மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்குவதை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் அன்புராஜன், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார், இயேசு விடுவிக்கிறார் ஊழிய மனிதவள மேம்பாட்டு அலுவலர் ஜெபசிங், மக்கள் தொடர்பு அலுவ லர் சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.