கரிசல் இலக்கிய திருவிழா : புகைப்பட போட்டிக்கு அழைப்பு

கரிசல் இலக்கியத் திருவிழாவிற்கு கரிசல் மண்ணின் பண்பாட்டை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அனுப்பி வைக்கலாம் ஆட்சித்தலைவர் அறிவிப்பு

Update: 2023-12-02 07:58 GMT
கரிசல் இலக்கியத் திருவிழாவிற்கு கரிசல் மண்ணின் பண்பாட்டை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அனுப்பி வைக்கலாம் ஆட்சித்தலைவர் அறிவிப்பு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக கரிசல் இலக்கியத் திருவிழா வரும் 08 மற்றும் 09 ஆகிய 2 தினங்கள் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தை குறிஞ்சி முல்லை, மருதம்,நெய்தல், பாலை என ஐ வகையாகப் பிரித்தார்கள். சங்க இலக்கியப் பரப்பெங்கும் இதைக் காணலாம். இப்படித்தான் வட்டார மண் சார்ந்த இலக்கியமும் நவீன தமிழ் இலக்கியத்தில் வளர்ந்திருக்கிறது.கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும் நாமும் நமது வருங்காலச் சந்ததிகளும் அறிந்து கொள்ளவும், கரிசல் இலக்கியங்கள் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துவதும், கரிசல் இலக்கியப் படைப்புகளை மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பதும், புதிய படைப்பாளர்களை உருவாக்குவதும் இந்த கரிசல் இலக்கியத் திருவிழாவின் முக்கிய நோக்கமாகும்.

இத்திருவிழாவில் கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகளும், எழுத்தாளர்களும், கல்லூரி மாணவர்களும் கலந்துரையாடும் நிகழ்வுகளும் கரிசல் இலக்கியங்கள் மற்றும் படைப்பாளர்கள் பற்றிய முக்கியக் குறிப்புகள் அடங்கிய கண்காட்சியும் நடைபெற இருக்கின்றன. கரிசல் மண்ணின் பண்பாட்டை வெளிப்படுத்தும் தொழில் வளம், விவசாயம், உணவு, பழக்கவழக்கங்கள், வழிபாடு, நம்பிக்கைகள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகளை காட்சிப்படுத்தும் விதமாக புகைப்படங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களின் டிவிட்டர் சமூக வலைத்தளமான @VNRCollector- க்கு Tag செய்யலாம் அல்லது photocontestkarisal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

சிறந்த புகைப்படங்களுக்கு முதல் பரிசு ரூ.20,000-மும், இரண்டாவது பரிசு ரூ.15,000-மும், மூன்றாம் பரிசு ரூ.10,000-மும், ஆறுதல் பரிசாக 5 நபர்களுக்கு தலா ரூ.2000-மும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. எனவே ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கரிசல் மண்ணின் பண்பாட்டை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும், நாமும் நமது வருங்காலச் சந்ததிகளும் அறிந்து கொள்ள கரிசல் இலக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது. எனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும், இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், படைப்பாளிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News