கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்ய 12ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-09 06:06 GMT
பயிர் காப்பீடு

தர்மபுரி மாவட்டத்தில் வரும் 12ம் தேதிக்குள் கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு தர்மபுரி ஒருங்கிணைந்த வேளாண்மை இணை இயக்குனர் சார்பில் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து தர்மபுரி மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தர்மபுரி மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டு ரபி பருவத்தில், பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட இப்கோ - டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட்., நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவேண்டும்என்ற நோக்கத்துடன், காப்பீட் டிற்கான காலவரம்பு 12ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஏக்கருக்கு 2600 ரூபாய் செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் விண்ணப்பிக்கும்போது, கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் (1433), இ-அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின்பு அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News