தேர்தல் கண்காணிப்பு வாகனங்களில் கேமராக்கள் பொருத்தம்
சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்களில் 5g மற்றும் சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய 360 டிகிரி கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் தீவிர படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உடனடியாக தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனை தீவிரப்படுத்தப்படுமென சொல்லப்படும் நிலையில் முதல் கட்டமாக தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ எடுக்கும் குழு, பார்க்கும் குழு, கணக்கியல் குழுஎன தேர்தல் பணிக்காக 24 நான்கு சக்கர வாகனங்களில் அதிகாரிகள் பணி செய்ய உள்ளனர்.
அவர்கள் பணி செய்யும் வாகனத்தில் 5g மற்றும் சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய 360 டிகிரி கேமரா பொருத்தும் பணிதீவிர படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வீடியோ பதிவு செய்பவருடன், வாகனங்களில் உள்ள கேமராவில் பதிவாவதை, கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது