களப்பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட விண்ணப்பிக்கலாம்

பிரதான் மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் களப்பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-08 03:17 GMT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 

விருதுநகர் மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் சார்ந்த உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பிரதான் மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் (PMFME) 01.12.2022 ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புதிய மற்றும் விரிவாக்கம் முறையில் அனைத்து உணவுப் பொருட்கள் சார்ந்த குறு உற்பத்தித் தொழில்களுக்கும் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

35% அரசு மானியமாக அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. தனிநபர் மற்றும சிறு நிறுனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சிறிய அரிசி ஆலை, எண்ணெய் பிழியும் செக்கு மில், இட்லி தோசைக்கான ஈர மாவு, மீன் சார்ந்த பொருட்கள், அப்பளம், சிறுதானிய பொருட்கள் வாசனை பொடிகள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்றவைகள் இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் https://pmfme.mofpi.gov.in/pmfme என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம். தொழில் முனைவோர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்து தொழில் தொடங்க வழி நடத்துவதற்கு ஊராட்சி ஒன்றிய அளவிலான மாவட்ட வள நபர்கள் (District Resources Person) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பிப்பவர்கள் .

பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் 21 முதல் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் பொதுப்பிரிவினர் / பிற்படுத்தபட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / இருக்கவேண்டும். 21 முதல் 45 வயதுக்கு மிகாமல் தாழ்த்தப்பட்டோர்/பெண்கள் இருக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட பணி பார்ப்பதற்கு தாங்கள் வேறு பிற ஒப்பந்தபணியிலோ, தனியார் நிறுவனத்திலோ மற்றும் அரசு நிறுவனத்திலோ பணி பார்க்கக்கூடாது. விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும். மேலும் இப்பணி முழுக்க முழுக்க 100% களப்பணியாற்ற வேண்டியிருக்கும். மேற்படி ஒப்பந்த பணியில் பணிபுரிய விரும்புவோர் தங்களுடைய சுய விபரம் (பயோ - டேட்டா, கல்வித்தகுதி சான்றிதழ், குடும்ப அட்டை) அடங்கிய விண்ணப்பத்தினை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு தபால் மூலம் அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் விண்ணப்பங்கள் 20.06.2024 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News