திரும்பப் பெற்ற வழக்குகளை எதிர்த்து வழக்குத் தொடர முடியுமா?: விளக்கம் அளிக்க உத்தரவு

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா? என்று மனுதாரர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update: 2024-04-26 12:12 GMT

முதல்வர் ஸ்டாலின்

மேம்பால முறைகேடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்ததை திரும்ப பெற்றதை எதிர்த்து கோவை தொழிலதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

1996-2001 திமுக ஆட்சியில் சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் 115 கோடி முறைகேடு நடந்துள்ளதாக 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய மேயர் ஸ்டாலின்,

Advertisement

அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர அனுமதியளித்து 2005ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பின்னர் வந்த திமுக ஆட்சியில் கைவிடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின்,

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு தொடர்பான வழக்கை திரும்பப் பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா?, சபாநாயகர் 15 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா? என்று மனுதாரர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News