சாலையின் குறுக்கே பள்ளம் கால்வாய் பணி நின்றதால் அவதி
பூந்தமல்லி நகராட்சி நாவலர் தெருவில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டி, 10 நாட்களாக பணிகள் துவங்காததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Update: 2024-04-30 01:03 GMT
பூந்தமல்லி நகராட்சி நாவலர் தெருவில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டி, 10 நாட்களாக பணிகள் துவங்காததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பூந்தமல்லி அருகே கரையான்சாவடி - சென்னீர்குப்பம் நெடுஞ்சாலை உள்ளது. இந்த வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்த நெடுஞ்சாலையோரம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட கரையான்சாவடி நாவலர் தெரு இணையும் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க, 5 அடி ஆழத்திற்கு 10 நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால், நாவலர் தெரு வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் பள்ளம் தோண்டபட்ட இடத்தின் அருகே, சிறிய வழியில் ஆபத்தான முறையில் நடந்து சென்று அவதிக்குள்ளாகின்றனர்.