புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவில்பட்டி, சொர்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு நடந்தது.

Update: 2024-02-07 12:38 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திராநகர் சொர்னா நர்சிங் கல்லூரி கூட்டரங்கில்  நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சாந்திபிரியா தலைமை வகித்தார். கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன், மேனாள் வேளாண்மை துறை கண்காணிப்பாளர் நடராஜன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். தியான் பவுண்டேஷன் மருத்துவ அலுவலர் சிவக்குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி புற்றுநோயும் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பொதுமக்களிடம் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், புற்றுநோய் இல்லாத உலகத்தை படைத்திடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  பின்பு மாணவர்களின் புற்றுநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில்  தியான்  பவுண்டேஷன் சஞ்சீவி, ஆசிரியர்கள் பாண்டிச் செல்வி, பூபதி உள்பட மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் லாவண்யா வரவேற்றார். நிறைவாக ஆசிரியை திவ்யா நன்றி கூறினார்.
Tags:    

Similar News