பழ வியாபாரம் செய்து மாம்பழத்துக்கு வாக்கு கேட்ட வேட்பாளர்

மயிலாடுதுறையில் பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் பழ வியாபாரம் செய்து வாக்கு திரட்டினார்.

Update: 2024-04-13 01:32 GMT

மயிலாடுதுறை பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் மயிலாடுதுறை நகர் பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பாமக தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இருசக்கர வாகன வாகனங்களின் அணிவகுப்புடன் நகர் வீதிகளில் திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்க வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலினுக்கு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பழக்கடை வியாபாரிகள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் பரப்புரை வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்த வேட்பாளர் ம.க.ஸ்டாலின், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகளை கட்டி அரவணைத்து அவர்கள் அளித்த ஆதரவுக்கும், வரவேற்புக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, வண்டிக்காரத்தெரு பகுதியில் பகுதியில் உள்ள பழக்கடையில் அமர்ந்து பழம் வியாபாரம் செய்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News