வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி

திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-13 00:55 GMT

திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.


விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மனம்பூண்டியில் உள்ள முகையூர் ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டது. தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முக வர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணி திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், தாசில்தார்கள் மாரியா பிள்ளை, கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த பணியை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

Similar News