மிதிவண்டி மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி
சிறுகளத்தூர் அருகே மிதிவண்டி மீது கார் மோதிய விபத்தில் மிதிவண்டியில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Update: 2023-12-27 05:11 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மிதிவண்டியில் சிலா வட்டம் கிராமத்தில் இருந்து மதுராந்தகம் பகுதிக்கு தினந்தோறும் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று கணேசன் அவருடைய மிதிவண்டியில் மதுராந்தகத்திலிருந்து சிலா வட்டம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது சிறுகளத்தூர் என்ற இடத்தில் பின்னால் வந்த கார் மிதிவண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மிதிவண்டியில் சென்ற கணேசன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.