பல்லடம் அருகே ஈச்சர்வேன் மீது கார் மோதி விபத்து: ஆறு பேர் படுகாயம்
பல்லடம் அருகே அதிகாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஈச்சர் வேனின் பின்புறம் கார் மோதி விபத்து ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.;
விபத்தில் சிக்கிய கார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ஆனந்த்,கௌதம்,கவின்,குமரன் உள்ளிட்ட 6 பேர் கோவை சாலையிலிருந்து பல்லடம் நோக்கி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது காரணம்பேட்டை கோடங்கிபாளையம் பகுதியை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த ஈச்சர் வேனில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் அங்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி இருந்த ஆறு பேரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே அதிகாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஈச்சர் வேன் மீது கார் மோதிய விபத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.