வெள்ளியணை அருகே கார் மோதி விபத்து

Update: 2023-11-06 15:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 கரூர் தாந்தோணி மலை அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நமச்சிவாயம் வயது 31. இதே போல திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை வயது 62 . இவரது மகள் துளசி மணி வயது 22. மேலும், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, பாளையம் அருகே உள்ள முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.

இவர்கள் அனைவரும் நவம்பர் 4-ம் தேதி இரவு 11 மணி அளவில், கரூரில் இருந்து பாளையம் செல்லும் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை வெள்ளைச்சாமி ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் வெள்ளியணை அருகே பாலமுருகன் ஒர்க் ஷாப் அருகே வேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அண்ணாதுரை, அவரது மகள் துளசி மணி, கார் டிரைவர் வெள்ளைச்சாமி ஆகிய மூவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காரில் பயணித்த நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான வெள்ளைச்சாமி மீது நவம்பர் 5ஆம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News