கார் - லாரி மோதல் : பெட்ரோல் பங்க் உரிமையாளர் பலி
மகுடஞ்சாவடி அருகே தீடிரென பிரேக் பிடித்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
Update: 2024-05-30 08:37 GMT
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (59), பெட்ரோல் பங்க் உரிமையாளர். இவர் நேற்று மதியம் சேலத்தில் இருந்து சங்ககிரி நோக்கி சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி அடுத்து உள்ள காளி கவுண்டம்பாளையம் பகுதியில் காரில் சென்றார். அப்போது தனக்கு முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால் கார் லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் சம்பத்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து பற்றிய தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சம்பத்குமார் உடலை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மகுடஞ்சாவடிபோலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.