கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் படுகாயம்
சாத்தூர் பைபாஸ் சாலையில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
Update: 2023-10-29 03:29 GMT
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் சேர்ந்த மணிகண்டன் ( 40 ) இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான களக்காட்டில் நடந்த விழாவிற்கு தனது மனைவி மகளுடன் வந்துள்ளார். திருவிழா முடித்து களக்காட்டில் இருந்து மீண்டும் சென்னை செல்வதற்கு காரில் கிளம்பியுள்ளார். செல்லும் வழியில் கோவில்பட்டி சாத்தூர் நான்கு வழிச்சாலையில் சென்ற போது நாய் குறுக்கே சென்றுள்ளது இதனால் காரை ஓட்டி வந்த டிரைவர் தேவசகாயம் (47) காரை நிறுத்த முயன்ற போது கார் கட்டுப்பாட்டினை இழந்து சாலையின் பக்கவாட்டு தடுப்பு கம்பியில் மோதி கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிகண்டன், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்டு சாத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் டோல்கேட் பணியாளர்கள் விபத்து நடந்த இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.