குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து

குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பயணிகளின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

Update: 2024-01-22 16:25 GMT

விபத்துக்குள்ளான கார்

மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் தங்களது சொந்த வாகனத்திலேயே வருகின்றனர்.

குறிப்பாக சமவெளி பகுதிகளில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதைகளில் வாகனத்தை இயக்குவது சற்ற சிரமமான ஒன்றாகும். இந்த நிலையில் உதகைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகளின் கார் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காட்டேரி என்னும் பகுதியில் விபத்துக்குள்ளானது.

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக சிறுக்காய்களுடன் அனைவரும் உயிர்த்தபினர்.

Tags:    

Similar News