கார்பன் சமநிலை இராஜபாளையம் செயல் திட்ட அறிக்கை வெளியீடு

இராஜபாளையத்தில் “கார்பன் சமநிலை இராஜபாளையம்” என்னும் புதிய திட்டத்தினை 2041ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்துதல் தொடர்பான செயல் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வெளியிட்டார்.

Update: 2024-03-15 05:34 GMT

செயல் திட்ட அறிக்கை வெளியீடு 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் சார்பாக இராஜபாளையத்தில் “கார்பன் சமநிலை இராஜபாளையம்” என்னும் புதிய திட்டத்தினை 2041ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்துதல் தொடர்பான செயல் திட்ட அறிக்கையினை திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ப.தேவராஸ், தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆளுகைக்குழு உறுப்பினர் நிர்மலா ராஜா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் 2023-24 சட்டமன்ற கூட்டத்தொடரில் ராஜபாளையம், கோயமுத்தூர், நீலகிரி மற்றும் ராமேஸ்வரம் நகராட்சிகள் கார்பன் சமநிலை நகராட்சிகளாக மாற்றுவதற்கு அறிவிப்புகள் வெளியிட்டு, “கார்பன் சமநிலை” என்னும் புதிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் (30.08.2023) அன்று தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் சார்பாக, மாநில மக்களுக்கு நிலையான மற்றும் காலநிலைக்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக “கார்பன் சமநிலை இராஜபாளையம்” என்னும் புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

“கார்பன் சமநிலை இராஜபாளையம்” என்னும் புதிய திட்டத்தினை 2041ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்துதல் தொடர்பான செயல் திட்ட அறிக்கையினை திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஸ் தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆளுகைக்குழு உறுப்பினர் நிர்மலா ராஜா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலபன் வெளியிட்டார். 2041ஆம் ஆண்டுக்குள் இராஜபாளையம் நகராட்சி கார்பன் சமநிலையை அடையும் வகையில் இராஜபாளையத்தில் உள்ள பொதுமக்களிடம் இத்திட்டம் குறித்து கருத்துக்கள் பெறப்பட்டு அதனடிப்படையில் செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இராஜயபாளையத்தில், இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உள்ளது. இராஜபாளையத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலையில் பசுமை பரப்பை அதிகரித்து அதன் மூலம் கார்பன் உமிழ்வை குறைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இராஜபாளையத்தில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் மின்சார பயன்பாட்டின் மூலம் ஏற்படும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கு காற்றாலை மற்றும் சூரிய ஒளியால் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி குறைப்பதற்கான உத்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள், ஆற்றல் திறன்வாய்ந்த கட்டுமானங்கள், போக்குவரத்து, நிலையான கழிவு மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை மட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News