மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-12-04 15:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம், சிவகாசி Jaycees மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்தியாவில் பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வியில் சேர்க்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 32 சதவிகிதமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் இது 52 சதவிகிதமாக இருப்பதாகவும். இந்தியாவிலேயே அதிகமாக விருதுநகர் மாவட்டத்தில் தான் கடந்த 2022-23 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களில் 97 சதவிகிதம் உயர்கல்விக்கு சென்றுள்ளனர். உயர்கல்விக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வு இருந்தால், அவர்கள் நல்ல முடிவு எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.

ஒரு தெளிவான இலக்கை நிர்ணயிக்கும் போது, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நமக்கு எளிதாக இருக்கும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள். இதிலிருந்து உங்களுக்கான இலக்கை அடைவதற்கு என்ன தேவை என திட்டத்தை வகுத்துக் கொள்வது மிக அவசியம். 12-ஆம் வகுப்பு மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எந்த வாய்ப்பும் மிக எளிதாக கிடைக்காது. கஷ்டப்பட்டால் தான் கிடைக்கும்.

அதிலே குறைவான கஷ்டத்தில் ஒரு நல்ல வாய்ப்பு வர வேண்டும் என்றால் அது நீங்கள் எடுக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களால் முடியும். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய இன்னும் சில நாட்களை மிகவும் கவனமாக பயன்படுத்தி, தற்போது எவ்வளவு நேரம் படிக்கிறீர்களோ அதைவிட அதிலிருந்து ஒரு 5 சதவீதம் அதிகமாக உங்களுடைய நேரம், ஆற்றல், முயற்சிகளை எடுக்கும்போது, பெறக்கூடிய மதிப்பெண்களும், அதனால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் மிகப்பெரிய அளவில் இருக்கும். எனவே அந்த மதிப்பெண்களை தவறவிடாத, வாய்ப்புகளை தவறவிடாத சிறந்த மாணவ, மாணவர்களாக வரவேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News