காஞ்சிபுரம் தனியார் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-17 07:14 GMT

கருத்தரங்கம் 

காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் பல்வேறு தொழில்நெறி வழிகாட்டு கருத்தரங்கங்கள் மாவட்ட முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடத்தி வருகிறது. இது மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டுதலையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. விழாவிற்கு வந்தவர்களை துணை இயக்குனர் அருணகிரி வரவேற்றார். இதில் வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குனர் தேவேந்திரன் திட்ட விளக்க உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாவட்ட பயிற்சி ஆட்சியர் சங்கீதா ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டு மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளில் பங்கேற்றல் மற்றும் வெற்றி பெறும் வழிமுறைகளை எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட புள்ளியில் துறை துணை இயக்குனர் குப்புசாமி அரசு பணி பெறுவதில் போட்டித் தேர்வின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். திறன் மேம்பாட்டு வாழ்வியல் கலைகள் குறித்து தனியார் கல்வி மைய இயக்குனர் விஜய கணேஷ், உளவியல் ரீதியான வாழ்க்கை வழிகாட்டல் குறித்து ராதிகா உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் நன்றி தெரிவித்தார். ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த சிறப்பு கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்கள் தேர்வு சந்தேகம் மற்றும் போட்டித் தேர்வுகள் குறித்து அறிந்து கொண்டனர்.

Tags:    

Similar News