சரக்கு ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் படுகாயம் !
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-03-13 08:25 GMT
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேலம் குரங்குச்சாவடி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 32), ஆட்டோ டிரைவர். இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ மூலம் நிறுவனங்கள், கடை, வீடுகளுக்கு கேனில் குடிநீர் வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று சரக்கு ஆட்டோவில் தண்ணீர் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். நேற்று மதியம் மாமாங்கம் பகுதிக்கு செல்வதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோவை ஓட்டி வந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென குறுக்கே வந்ததாக தெரிகிறது. இதனால் தாமோதரன் ஆட்டோவை நிறுத்த முயன்றார். அப்போது நிலை தடுமாறி அங்கிருந்த தடுப்புசுவரில் சரக்கு ஆட்டோ மோதி தலைக்குப்புற கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாட்டில் சிக்கிய தாமோதரன் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த திடீர் விபத்தால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.