கெங்கவல்லி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து !
கெங்கவல்லி அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-29 04:42 GMT
விபத்து
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த 12 பேர் சரக்கு வேனில் பாலக்காட்டிற்கு கூலி வேலைக்கு சென்றனர். இந்த வேனை ராஜேந்திரன் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். வேலை முடிந்த பிறகு தொழிலாளர்கள் மீண்டும் ஊருக்கு வேனில் புறப்பட்டனர். விநாயகபுரம் என்ற இடத்தில் சென்றபோது சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் டிரைவர் மற்றும் தொழிலாளர்கள் ஆண்டாள், பொன்னம்மாள், கண்ணம்மாள், பூங்காவனம், ராஜாத்தி உளளிட்ட 12 பேர் காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.