கேரம் போட்டியில் ஆர்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் சாதனை
Update: 2023-11-28 01:31 GMT
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்குட்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையேயான கேரம் போட்டி குமரி மாவட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது. இதில் மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை ஆர்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 12 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் பியோனா, ஓவியா முதல் பரிசையும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரணா, அர்சித் ரிஸ்வான் இரண்டாம் பரிசையும், 14 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஸ்டெனி முதல் பரிசையும் வென்றனர். 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஹேசல் மெர்சியா முதல் பரிசையும், இரட்டையர் பிரிவில் ஹேசல் மெர்சியா-விஸ்மிகா முதல் பரிசையும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் ரிஜோ முதல் பரிசையும், 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஸ்மின் லிஜா, 2-வது பரிசையும் பெற்றுள்ளனர். புள்ளிகள் அடிப்படையில் 2-ம் இடத்தை பெற்று சுழற்கேடயத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள்.