குமரியில் 1,121 பேர் மீது வழக்கு
போக்குவரத்து விதிகளை மீறியதாக குமரியில் 3 நாட்களில் 1,121 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Update: 2024-01-02 07:43 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு விபத்துகளை தவிர்க்க நாகர்கோவில், தக்கலை, குளச்சல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு சப் டிவிஷன்களிலும் எஸ் பி சுந்தரவதனம் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று மாவட்ட முழுவதும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், மூன்று பேர் பயணம் செய்தவர்கள், ஓட்டுநர் உரிமை இல்லாமல் பயணம் செய்தது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் வைத்திருந்த வாகனங்கள் மற்றும் மது போதையில் வாகன ஓட்டுபவர்கள் என மொத்தம் 470 மீது வழக்குப்பதி செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு, இதில் சில வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகர்கோவில் மாநகரில் மட்டும் வாகன சாகசத்தில் ஈடுபட்டதாக 18 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட முழுவதும் கடந்த மூன்று நாட்களாக போதையில் வாகன ஒட்டியதாக 170 உட்பட மொத்தம் 1,121 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.