பிரிந்து சென்ற மனைவியை தாக்கிய கணவன் உட்பட 3 பேர் மீது வழக்கு 

குளச்சல் அருகே குடும்ப பிரச்சினையால் பிரிந்து வாழும் மனைவியை தாக்கிய அவரது கணவன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.;

Update: 2024-04-16 04:29 GMT

பைல் படம் 

குமரி மாவட்டம் குளச்சல் அருகே படுவாக்கரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி லீலா (55). இத்தம்பதியினரின் மகள் பிரியா என்பவரை குழிக்கோடு பகுதியை சேர்ந்த குமார் (48) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.  குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஆறு மாதமாக பிரியா கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதில் மூன்று பிள்ளைகள் பிரியாவுடன் உள்ளனர். ஒரு பிள்ளை குமாருடன் உள்ளது.      

Advertisement

 இந்த நிலையில் நேற்று முன்தினம் குமார் மற்றும் முருகன் (42) மற்றும் கண்டால் தெரியும் ஒரு நபர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து நாகராஜன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு தகராறு செய்து கம்பால் லீலா மற்றும் பிரியாவை தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த லீலா, பிரியா ஆகியோர் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து குமார், முருகன் மற்றும் கண்டால் தெரியும்  ஒரு நபர் என மூன்று பேர் மீது  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News