பேனர் வைத்து 5 பேர் மீது வழக்கு
தேனியில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-29 06:33 GMT
பேனர் வைத்து 5 பேர் மீது வழக்கு
தேனி நகர் பகுதியில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொது இடங்களில் பிளக்ஸ், பேனர் வைத்த அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த ஆண்டவர் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி நகர செயலாளர் மணி, அதிமுக நகரச் செயலாளர் குரு கணேஷ், அல்லிநகரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், விசிக கட்சி நகர துணைச் செயலாளர் வீர தெய்வம் ஆகியோர் மீது தேனீ காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.