தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் 50 பேர் மீது வழக்கு !
எடப்பாடியில் பாஜக பாமகவினர் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் அனுமதியின்றி நடைபெற்றதால் பறக்கும் படை நடவடிக்கை.
By : King 24x7 Angel
Update: 2024-03-29 09:27 GMT
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் அனுமதி இன்றி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பாமக மாவட்ட செயலாளர் பாஜக மாவட்ட செயலாளர் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேப்பமனு தாக்கல் நிறைவு பெற்று அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவணி பேரூர் கீழ் முகம் ஆலமரத்துக்காடு சக்தி காளியம்மன் கோயில் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பாமக வேட்பாளர் அண்ணாதுரைக்கு வாக்கு சேகரிப்பதற்கான அறிமுக கூட்டம் பாமக மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் பாஜகவை சேர்ந்த மாவட்ட பொதுச்செயலாளர் கலைச்செல்வன், எடப்பாடி நகர செயலாளர் சந்திரன், பாமக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரவி, தொண்டர் அணி செயலாளர் ஏழுமலை ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காத்திருந்தனர். தகவறிந்த எடப்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று 28 3 2024 இரவு 7.30 மணி அளவில் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதில் உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்ததை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் பாலகிருஷ்ணன் கூட்டம் நடத்திய மாவட்ட செயலாளர் செல்வகுமார், எடப்பாடி பாஜக நகர செயலாளர் சந்திரன் மற்றும் 50 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பனிடம் புகார் அளித்ததன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.