மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் மீது வழக்கு

சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடியில் இடத்தை ஆக்கிரமித்தும்,சுவர் பக்கம் கழிவுநீர் நின்றதை தட்டி கேட்ட மூதாட்டியை தாக்கிய கணவன், மனைவி மற்றும் மகன் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.;

Update: 2024-01-30 06:47 GMT

வழக்குப்பதிவு 

திருச்சி மாவட்டம், ரெட்டி மாங்குடி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 60 வயதான பாப்பாத்தி. இவருடைய கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகள் மற்றும் மருமகனுடன் ஒரே குடும்பமாக வசித்து வந்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ரமா மகன் சச்சின். பாப்பாத்தி இடத்தை பாண்டியன் குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறப்படுகிறது.மேலும் பாண்டியன் வீட்டு கழிவுநீர் மூதாட்டி பாப்பாத்தி வீட்டின் சுவர் பக்கம் குட்டைபோல் தேங்கியுள்ளது. இதனால் சுவர் வீணாவதாக பாண்டியன் குடும்பத்தினரிடம் பாப்பாத்தி கேட்டுள்ளார்.

Advertisement

அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியது. இதில் ரமா, பாண்டியன் மற்றும் மகன் சச்சின் ஆகியோர் சேர்ந்து பாப்பாத்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பாப்பாத்தி லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து பாப்பாத்தி சிறுகனூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் ரமா, பாண்டியன் மற்றும் சச்சின் ஆகிய மூன்று பேரும் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News