மண்வெட்டியால் விவசாயியின் தலையில் வெட்டியவர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே மண்வெட்டியால் விவசாயியின் தலையில் வெட்டியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுந்தர்ராஜ் (61). அதே பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ் (50). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் இடையே வழிப்பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினம் மதியம் சுந்தர்ராஜ் தனது வாழை தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டென்னிஸ் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மண் வட்டியால் சுந்தர்ராஜன் தலையில் வெட்டி உள்ளார்.
இதில் சுந்தர்ராஜன் காது பகுதியில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து சுந்தர்ராஜ் மீட்கப்பட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீசார் டென்னிஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.