வங்கி பெண் மேலாளரை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு

ஆபாச வீடியோ வெளியிடுவதாக கூறி தனியார் வங்கி பெண் மேலாளரை மிரட்டிய ஊழியர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-04-05 04:40 GMT

வழக்கு பதிவு 

தூத்துக்குடியை சேர்ந்த 41 வயது பெண் கோவை தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதே வங்கியில் பணிபுரியும் விக்னேஷ் என்பவருடன் கடந்த, 2021-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

அப்போது இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தாக கூறப்படுகிறது. தனிமையில் இருந்ததை அந்த பெண்ணிற்கு தெரியாமல் விக்னேஷ் வீடியோ எடுத்து வைத்ததாக தெரிகிறது.

இதனிடையே அந்த வீடியோவை காண்பித்து விக்னேஷ், அந்த பெண்ணை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், தனது உறவினர்களை அழைத்து கொண்டு ராம் நகரில் உள்ள விக்னேஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது உறவினர்கள் விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இதுகுறித்து கேட்டனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் சாதி பெயரை கூறி திட்டியதாக தெரிகிறது. மேலும் விக்னேஷ் தான் எடுத்து வைத்து உள்ள ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் கோவை மத்திய அனைத்து மகளிர் நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விக்னேஷ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், மீரா ரமணி, பிரனேஷ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News