நள்ளிரவில் வீட்டை சூறையாடிய சகோதரர்கள் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு பகுதியில் முன்விரோதத்தால் வீட்டை அடித்து உடைத்த சகோதரர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு அடுத்த வர்த்தகநாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி செல்வபாய். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயசீலன் குடும்பத்திற்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவ தினம் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் செல்வபாய் வீட்டு காம்பவுண்டுக்குள் கம்பு கற்களுடன் அத்துமீறி நுழைந்த ஜெயசீலன் மகன்கள் ஜெரின், ஜெர்வி ஆகியோர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், கார் போன்றவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது.
பின்னர் கல்லால் வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். செல்வபாய் குடும்பத்தினர் சத்தம் போடவே, கொலை மிரட்டல் விடுத்த அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது ஒரு செல்வவாய் அளித்த புகாரின் பேரில் ஜெரின், ஜெர்வி மற்றும் ஜெயசீலன் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.