மொபைல் கடை உரிமையாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு!

திருப்பூரில் மொபைல் கடை உரிமையாளரை தாக்கியவர்களை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-12 09:04 GMT

திருப்பூரில் மொபைல் கடை உரிமையாளரை தாக்கியவர்களை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூரில் மொபைல் கடை உரிமையாளரை தாக்கியவர்களை, பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை ! திருப்பூர் கல்லூரி சாலை சாரதா நகர் பகுதியை சேர்ந்தவர் காசன்கான்., அதே பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார் ., இவரது கடையின் எதிரே ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இதனிடையே காசன்கான் கடைக்கு சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் 500 ரூபாய் கொடுத்து.,   ஜி.பே  மூலம் பணம் அனுப்ப சொல்லி உள்ளனர். இதை எடுத்து காசன் கான் 500 ரூபாய் அனுப்புவதற்கு பத்து ரூபாய் சர்வீஸ் சார்ஜ் ஆகும் என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி நிர்வாகிகள் தங்களது பகுதியில் கடை வைத்துக்கொண்டு., தங்களிடமே கமிஷன் தொகை கேட்கிறாயா என்று வாக்குவாதத்தில் ஈடுபட, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கடை உரிமையாளர் காசன் காணை சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது .இதனிடையே மொபைல் கடை உரிமையாளர் காசன் கான் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு  வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய இந்து முன்னணி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News