வாகனத்திலிருந்து செல் போனை திருடிய 2 பேர் மீது வழக்கு பதிவு
மார்த்தாண்டத்தில் வாகனத்திலிருந்து செல் போனை திருடிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
Update: 2024-04-30 00:45 GMT
மார்த்தாண்டத்தில் வாகனத்திலிருந்து செல் போனை திருடிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் வீனு.ஓட்டுநர். ஆந்திராவில் இருந்து மார்த்தாண்டத்திற்கு பெரிய கனரக வாகனத்தில் மீன் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். இவர் மீன் வண்டியை மார்த்தாண்டம் அருகே நிறுத்தி விட்டுவிட்டு உணவருந்த சென்றுள்ளார்.அப்போது அவரது வாகனத்தின் முன்பக்கசீட்டில் செல்போனை வைத்து விட்டு சென்று உள்ளார்.
இந்த போனை அங்கு நின்ற செறுகோல் கடமாங்குழி பகுதியைச் சேர்ந்த அபிஷேக், ஆற்றூ செண்பகத் தோப்பு விளையை சேர்ந்த சந் தோஷ் ஆகியோர் திருடிச் சென்று உள்ளனர். இது குறித்து வீனு மார்த்தாண் டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.