திருக்கோவிலூரில் பாமக, விசிகவினர் 296 பேர் மீது வழக்கு பதிவு
திருக்கோவிலுார் அருகே விசிக - பாமகவினரிடையே ஏற்பட்ட தேர்தல் மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 296 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
Update: 2024-04-21 08:50 GMT
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த டி.தேவனுார் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் தொடர்பாக வி.சி., மற்றும் பா.ம.க., இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக சாலை மறியல் உள்ளிட்ட சம்பவங்களில் இருதரப்பினரும் ஈடுபட்டனர். இதுகுறித்து நேற்று டி.தேவனுார் காலனியைச் சேர்ந்த வி.சி., முகாம் செயலாளர் ஏழுமலை, 42; கொடுத்த புகாரின் பேரில் பா.ம.க.,வைச் சேர்ந்த பாஸ்கர், சிவகுமார், புகழேந்தி, கந்தசாமி உட்பட 153 பேர் மீதும், பா.ம.க., முன்னாள் கிளைக் கழக செயலாளர் பாஸ்கரன், 52; கொடுத்த புகாரின் பேரில் வி.சி., கட்சியைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் கந்தன் அவரது மகன் பிரவீன், கபிலன், கிருஷ்ணமூர்த்தி உட்பட 143 பேர் மீது அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.